நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை விசாரணைகள் - சர்வதேசமயமாகப்பட வேண்டும்: ரவூப் ஹக்கீம்

காத்தன்குடி:

முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை விசாரணைகள் சர்வதேச மயப்படுத்த வேண்டுமென காத்தான்குடியில் நேற்று (03) அனுஷ்டிக்கப்பட்ட 35ஆவது தேசிய ஷுஹதாக்கள் தின நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஊடகங்களிடம் தெரிவித்தார். 

1990ம் ஆண்டு ஆகஸ்ட் 03ஆம் திகதி ஹுஸைனியா பள்ளிவாயலிலும், மீரா ஜும்ஆ பள்ளிவாயலிலும் நடந்த படுகொலைச் சம்பவங்களில் ஷஹீதாக்கப்பட்ட 103 ஷுஹதாக்கள் நினைவாக இன்று துஆ பிரார்த்தனை காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலாமா சபை, ஊர் ஜமாஅதார்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே மேற்படி கருத்தைத் தெரிவித்தார். 

அத்துயர நினைவுகளை மீட்டிக் கொள்வதற்கும் ஷுஹதாக்களுக்காக பிரார்த்தனை செய்வதற்குமான ஒரு சந்தர்ப்பமாக இது வாய்த்ததையிட்டு பெருமகிழ்வுறுகிறோம்.

இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான சம்பவங்களின் படிப்பினைகளை சரிவர உணர்ந்து இனங்களுக்கிடையிலான உறவை மீளக்கட்டியெழுப்புவதில் எமது கட்சியும், கட்சித்தொண்டர்களும் முழு மூச்சுடன் ஈடுபட வேண்டும்.

அத்திடசங்கர்ப்பத்தை நாம் இந்த ஷுஹதாக்கள் நினைவு நாளில் உறுதி பூணுவது மாத்திரமல்லாமல், இத் துன்பியல் சம்பவங்கள் குறித்த வரலாற்றையும் சரிவர தொடர்ந்தும் மனதிலிருத்தி முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் சர்வதேச மயப்படுத்த வேண்டியது முக்கியமானதாகும் எனத்தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளால் காத்தன்குடி பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-எம்என்எம். யசீர் அரபாத், ஒட்டமாவடி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset