நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கத் தயார்: பின்லாந்து அதிபர்

ஹெல்சின்கி:

பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டப் (Alexander Stubb) அரசாங்கம் பரிந்துரை செய்தால் பாலஸ்தீன வட்டாரத்தைத் தனிநாடாக அங்கீகரிக்கத் தயார் என்று கூறியுள்ளார்.

ஐக்கிய நாட்டு நிறுவனப் பொதுச் சபைக் கூட்டம் அடுத்த மாதம் நடக்கவுள்ளது. அப்போது பாலஸ்தீன வட்டாரத்தைத் தனிநாடாக அங்கீகரிக்கப் போவதாக பிரான்ஸ், கனடா உள்ளிட்ட பல நாடுகள் அறிவித்துள்ளன.

இரு நாட்டுத் தீர்வை ஆதரிப்பதாக பின்லாந்துப் பிரதமர் பெட்டெரி ஓர்போ (Petteri Orpo) கூறியுள்ளார்.

ஆனால் பாலஸ்தீன வட்டாரத்தைத் தனிநாடாக அங்கீகரிக்க அரசாங்கம் தயாரா என்பது பற்றி அவர் ஏதும் சொல்லவில்லை. 

ஆதாரம்: AFP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset