
செய்திகள் மலேசியா
நாம் உயர்வோம் என்பதை நம்பிக்கையோடு உணர்ந்தால் வெற்றி நிச்சயம்: டத்தோஸ்ரீ சரவணன்
பண்டார் சௌஜானா புத்ரா:
நாம் உயர்வோம் என்பதை நம்பிக்கையோடு உணர்ந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை வலியுறத்தினார்.
நாம் ஏற்பாட்டில் ‘வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்’ எனும் தலைப்பில் ஸ்ரீ ஆசான்ஜியின் வெற்றிக்கான உரை மிக ஆத்மார்த்தமாக நடைபெற்றது.
பண்டார் சௌஜானா புத்ராவில் அமைந்துள்ள மாஹ்சா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே’’
காலையில் விழித்தவனும், நன்றாக உழைத்தவனும் வாழ்க்கையில் தோற்பதில்லை.
நாம் உயர்வோம் என்பதை நம்பிக்கையோடு உணர்ந்தால் வாழ்க்கை வெற்றி நிச்சயம்.
இந்த சிந்தனையுடன் வாழ்க்கையில் முன்னோக்கி செல்வோம் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 2, 2025, 12:48 pm