நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

Cycle & Carriage நிறுவனத் தரவுகள் கசிந்தன: 147,000 வாடிக்கையாளர் விவரங்கள் பாதிப்பு

சிங்கப்பூர்:

தரவு மீறல் காரணமாக 147,000 வாடிக்கையாளர்களின் விவரங்கள் கசிந்துள்ளதாக சிங்கப்பூர் Cycle & Carriage எனும் கார் விநியோக நிறுவனம் சொன்னது.

கடந்த ஜூலை 14ஆம் தேதி நிறுவனத்தின் வாடிக்கையாளர்ப் பதிவுகளை யாரோ அனுமதியின்றிப் பதிவிறக்கம் செய்ய முயன்றது கண்டுபிடிக்கப்பட்டதாக நிறுவனப் பேச்சாளர் ஒருவர் CNA செய்தியிடம் தெரிவித்தார்.

பதிவிறக்கம் செய்யப்பட்ட பெரும்பாலான பதிவுகளில் தகவல்கள் காணாமல் போயுள்ளன அல்லது பாதித் தகவல்களைக் காணவில்லை என்றார் அவர்.

பாதிக்கப்பட்ட தரவுப் பதிவுகளில் வாடிக்கையாளர்களின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள் ஆகியவை இருக்கலாம் என்று அவர் சொன்னார்.

சிலவற்றில் அடையாள அட்டை எண்களும் வைப்புத் தொகை குறித்த தகவல்களும் இருந்ததாக அவர் கூறினார்.

எனினும் வாடிக்கையாளர்களின் வங்கி அல்லது கடன் பற்று அட்டைத் தகவல்கள் எதுவும் கசியவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் நிறுவனம் மன்னிப்புக் கேட்டது.

பாதிக்கப்பட்டோருக்கு நிறுவனம் மின்னஞ்சல் வாயிலாகத் தகவல் அனுப்பி வருகிறது. விசாரணை நடத்தப்படுகிறது.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset