நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுரிமைச் சட்டம்: ஆகஸ்ட் 13ஆம் தேதி பிரதமரிடம் ஒப்படைக்கப்படும்: கார்த்திக்

கோலாலம்பூர்:

தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுரிமைச் சட்டம் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி பிரதமரிடம் ஒப்படைக்கப்படும்.

தோட்ட சமூக ஆதரவு குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கார்த்திக் கூறினார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுரிமைச் சட்டம் தொடர்பான முதல் மகஜர் கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் துன் மகாதீர் காலத்தில் வழங்கப்பட்டது.

அப்போது மனிதவள அமைச்சராக இருந்த குலசேகரன் இந்த மகஜரை பெற்றுக் கொண்டார்.

அதை தொடர்ந்து பல முயற்சிகள், நடவடிக்கைகளை தோட்ட சமூக ஆதரவு குழுவை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் இன்று வர இந்த சட்டம் அமல்படுத்தப்படவும் இல்லை. தோட்ட மக்களின் நலனும் காக்கப்படவில்லை.

இதன் அடிப்படையில் தான் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி மக்களவைக்கு முன் மிகப் பெரிய கூட்டம் கூடவுள்ளது.

கிட்டத்தட்ட 100 தோட்டங்களின் பிரதிநிதிகள் இங்கு வரவுள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுரிமைச் சட்டத்தை நேரடியாக பிரதமரிடம் கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் முதன்மை நோக்கமாகும் என்று கார்த்திக் கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்  இந்த சட்டத்தை அங்கீகரித்து அமல்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

குறிப்பாக சட்டத்துறை அமைச்சிடம் இச்சட்டம் ஒப்படைக்கப்பட்டு அது குறித்து ஆய்வுகளை நடத்த வேண்டும்.

இதுவே எங்களின் கோரிக்கை என்று மற்றொரு ஒருங்கிணைப்பாளர் கணேசன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset