நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறுவன் தேவக்‌ஷேனின் கொலை வழக்கில் தந்தையின் தடுப்புக் காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிப்பு: போலிஸ்

ஜெம்புல்:

சிறுவன் தேவக்‌ஷேனின் கொலை வழக்கில் தந்தையின் தடுப்புக் காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், இங்குள்ள ரொம்பினில் தனது ஆறு வயது மகனைக் கொன்று புதைத்ததாக சந்தேகிக்கப்படும்  ஆடவர், விசாரணைக்கு உதவுவதற்காக ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

 36 வயதான சந்தேக நபருக்கான தடுப்பு காவலுக்கான விண்ணப்பம் இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் நோர் ஷஸ்வானி இஷாக் முன் சமர்ப்பிக்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை ரொம்பின் அருகே ஒரு குழந்தையின் உடல் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர், இன்று காலை தடுப்புக் காவலில் வைக்கப்படுவதற்காக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

சந்தேக நபரை இன்று முதல் அடுத்த வியாழக்கிழமை வரை ஏழு நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் இது செய்யப்படுகிறது. 

ஜெம்பூல் மாவட்ட போலிஸ் தலைவர் நோர்ஹிஷாம் முஸ்தபார் இதனை உறுதிப்படுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset