
செய்திகள் மலேசியா
தோட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினைகளை எதிர்கொள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுரிமைச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்: அருட்செல்வன்
கோலாலம்பூர்:
தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுரிமைச் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அங்கீகரிக்க வேண்டும்.
தோட்ட சமூக ஆதரவு குழுவின் ஆலோசகர் அருட்செல்வன் இதனை கூறினார்.
தோட்டத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்கள் ஒரு காலக்கட்டத்தில் அத்தோட்டங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
வெளியேறும் போது அவர்களுக்கு வீடுகள் வழங்குவதில்லை.
இதனால் வீடுகள் இல்லாமல் பல இன்னல்களை அவர்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக வீடுகள் இல்லாமல் மக்கள் போராடி வருவதை நாம் பார்த்துக் கொண்டு தான் உள்ளோம்.
இதன் அடிப்படையில் தான் தோட்ட சமூக ஆதரவு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் கீழ் பல நிபுணர்களை கொண்டு தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுரிமைச் சட்டத்தை நாங்களே உருவாக்கி விட்டோம்.
தோட்ட மக்களை காக்க சட்டங்களை இயற்ற வேண்டும் என நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.
அதற்கு எந்த பலனும் இல்லை என்பதால் இந்த சட்டத்தை நாங்களை உருவாக்கி விட்டோம்.
ஆகவே இந்த சட்டத்தை மத்திய, மாநில அரசாங்கங்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி புரிந்த, முழு நேர, ஒப்பந்தம், ஓய்வு பெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டும்.
மலேசிய மக்களுக்கு முன்னுரிமையாகும். நிரந்தர காலத்திறகும் பாதுகாப்பான வீட்டு வசதிப் பகுதிகள் அமைத்து தர வேண்டும்.
குறிப்பாக ஒரு குடும்பம் ஒரு வீடு ஆகியவை இந்த சட்டத்தின் முக்கிய அம்சமாகும் என்று அருட்செல்வன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 1, 2025, 10:36 pm
சிலாங்கூரில் தண்ணீர் கட்டணம் செப்டம்பர் 1 முதல் உயரும்: அமீருடீன் ஷாரி
August 1, 2025, 10:16 pm
6,911 அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை மலேசியா பூஜ்ஜியமாகக் குறைத்துள்ளது: தெங்கு ஸப்ரூல்
August 1, 2025, 10:09 pm
ஷாரா மரண வழக்கில் பிரமுகரின் பிள்ளை சம்பந்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை: போலிஸ்
August 1, 2025, 9:08 pm
சக மாணவரை அடிக்கும் மாணவர்கள் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்: ஃபட்லினா
August 1, 2025, 9:05 pm
8ஆவது மாடியில் இருந்து விழுந்த 4 வயது சிறுவன் உயிரிழந்தான்: போலிஸ்
August 1, 2025, 5:56 pm