செய்திகள் மலேசியா
13ஆவது மலேசியத் திட்டத்தில் அசாதாரணமானது எதுவுமில்லை: இராமசாமி
கோலாலம்பூர்:
பிரதமர் தாக்கல் செய்த 13ஆவது மலேசியத் திட்டத்தில் அசாதாரணமானது எதுவுமில்லை என்று உரிமை கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் டாக்டர் இராமசாமி குறை கூறினார்.
நேற்று மக்களவையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 13ஆவது மலேசியா திட்டத்தை தாக்கல் செய்தார்.
இந்த திட்டத்தில் அசாதாரணமானது எதுவும் இல்லை.
அது கடந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டங்களைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார்.
13ஆவது மலேசியா திட்டம் இன அடிப்படையிலான அணுகுமுறையிலிருந்து மாறும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
இருப்பினும், நடைமுறையில் இந்தத் திட்டம் பெரும்பாலும் தற்போதைய நிலையின் தொடர்ச்சியாகும்.
வெளிநாட்டுக் கடன் அதிகரித்து வரும் இந்த நேரத்தில், இந்தத் திட்டத்தை திறம்பட செயல்படுத்த முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும் என்று அவர் ஒரு முகநூல் பதிவில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 10:59 pm
பூச்சோங் கெஅடிலான் தொகுதி கூட்டத்தில் கூச்சல், குழப்பம்; எந்தப் பிரச்சினையும் இல்லை: தலைவர்
April 20, 2026, 10:58 pm
கனமழையால் கேமரன்மலையில் திடீர் வெள்ளம்
April 20, 2026, 6:01 pm
டிக் டாக்கில் உதவி வழங்குவதாகக் கூறப்படுவதை பகாங் அரண்மனை மறுத்தது
April 20, 2026, 6:00 pm
இந்திராகாந்தி வழக்கு: புதிய ஆதாரங்களை நிராகரித்து, நீதிமன்றம் ஆச்சரியமூட்டும் தீர்ப்பை வழங்கியது
April 20, 2026, 5:36 pm
சொந்த ஊரில் எங்களுக்கு வாடகை.. அவர்களுக்கு இலவசமா?
April 20, 2026, 5:10 pm
புக்கிட் ஜாலிலில் சிக்கிய தென்கொரியாக் குற்றவாளி : குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணை தொடக்கம்
April 20, 2026, 5:04 pm
நிர்வாணமாகச் சுற்றித் திரிந்த நபர் மீட்பு
April 20, 2026, 5:03 pm
