நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜோகூருக்கும் துவாஸுக்கும் இடையில் இரண்டாம் RTS ரயில் சேவை ரயில்பாதை

ஜோகூர் பாரு:

ஜொகூர் மாநில அரசாங்கம், இஸ்கண்டார் புத்திரி (Iskandar Puteri) நகரைச் சிங்கப்பூரின் துவாஸ் பகுதியுடன் இணைப்பதற்கான இரண்டாம் RTS ரயில் சேவையை அறிமுகப்படுத்தப் பரிந்துரைத்துள்ளது.

ஜொகூர் மாநில முதலமைச்சர் ஒன் ஹாஃபிஸ் காஸி (Onn Hafiz Ghazi) சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கைச் (Lawrence Wong) சந்தித்தார்.

இருவரின் கலந்துரையாடலின்போது அந்தப் பரிந்துரை உட்பட மேலும் சில திட்டங்கள் குறித்துப் பேசியதாகத் ஒன் ஹாஃபிஸ் தெரிவித்தார்.

சந்திப்புக் குறித்துப் பிரதமர் வோங் அவரது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் மலேசிய அரசாங்கத்துடன் மேற்கொள்ளும் முக்கிய திட்டங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.

ஜொகூர் பாருவையும் சிங்கப்பூரையும் இணைக்கும் RTS ரயில் சேவை, ஜொகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார வட்டாரம் போன்ற திட்டங்கள் இரு நாடுகளுக்குமிடையே உள்ள வர்த்தக உறவை மேம்படுத்தி சிங்கப்பூரர்களுக்குக் கூடுதல் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் என்றார் சிங்கப்பூர் பிரதமர் வோங்.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset