நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

30 விழுக்காடு மித்ரா நிதியை திருப்பி கொடுத்தனர்; அப்போது யாரும் கேள்வி கேட்கவில்லை?: பிரபாகரன் ஆதங்கம்

புத்ராஜெயா:

இந்திய சமுதாயத்தின் உருமாற்ற திட்டங்களுக்காக  கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு பில்லியன் ரிங்கிட் மேல் மித்ராவுக்கு கிடைத்தது.

அதில் 30 விழுக்காடு மித்ரா நிதியை ஏன் திருப்பி கொடுத்தார்கள்?

அதை பற்றி ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை என்று மித்ரா தலைவர் பிரபாகரன் இன்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

என்னை நம்பி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மித்ரா தலைவர் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.

எந்தவொரு ஊழலும் இல்லாமல் இந்த மித்ரா நிதி சரியான முறையில் வழங்கப்படும்.

சிறிது காலதாமதம் ஆகலாம். அவ்வளவுதான். ஆனால் சரியான முறையில் பரிசீலிக்கப்பட்டு சரியானவர்களுக்கு அந்த நிதி வழங்கப்படும்.

மேலும் 100 மில்லியன் நிதியை கூடுதலாக கொடுக்கும்படி கோரிக்கை முன் வைத்துள்ளோம்.

கண்டிப்பாக வழங்குவோம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் உறுதி கூறியுள்ளார் என்று இன்று செர்டாங் மார்டி கோப்ரேசன் மண்டபத்தில் இந்திய சமுதாயத்திற்கான வணிக மாதிரி கேன்வாஸ், மலேசிய இந்திய உருமாறும் வேளாண்மை பயிற்சி பட்டறையை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே கடந்த வார இறுதியில் தலைநகரில் நடைபெற்ற துருன் அன்வார் பேரணியில் அதிகமான இந்தியர்கள் கலந்து கொள்ளவில்லை. இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஐந்து ஆண்டுகள் ஆட்சி புரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் என்ன செய்தது என்பதை கணக்கிட வேண்டும்.

பிரதமர் பதவியில் இருந்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை இறங்கினால் அடுத்த பிரதமர் யார் என்பதை அவர்களால் காட்ட முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset