நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கொலை செய்யப்பட்ட சிறுவன் தேவக்‌ஷேன் வீட்டில் அடிக்கடி சண்டை, அழுகை சத்தம் கேட்கும்: அண்டை வீட்டுக்காரர்

ஜொகூர்பாரு:

கொலை செய்யப்பட்ட சிறுவன் தேவக்‌ஷேன் வீட்டில் அடிக்கடி சண்டை, அழுகை சத்தம் கேட்கும்.

தேவக்‌ஷேனின் அண்டை வீட்டுக்காரர் ஒருவர் இதனை கூறினார்.

இங்குள்ள ஸ்ரீ ஆலமில் உள்ள வீட்டில் இருந்து சிறுவனின் அழுகை சத்தங்களும், பலத்த சண்டை சச்சரவுகளும் அடிக்கடி கேட்டன.

ஆனால், இந்த சண்டைகள் ஆறு வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்ட சோகமான மரணத்திற்கு வழிவகுக்கும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை.

தேவக்‌ஷேனின் அண்டை வீட்டுக்கரரான 47 வயதான கமாருடின் அப்துல்லா இதனை கூறினார்.

தனது அண்டை வீட்டாரின் வீட்டில் நிலவும் பதற்றம் குறித்து கவலை கொண்டதாக அவர் கூறினார்.

நான் சுமார் ஒரு வருடமாக அவர்களின் அண்டை வீட்டாராக இருக்கிறேன்.

சிறுவன் அழுவதையும் அவனது பெற்றோருக்கு இடையே உரத்த வாக்குவாதங்களையும் நான் அடிக்கடி கேட்டேன்.

ஆறு வயது சிறுவன் காணாமல் போனதாக சமீபத்தில் தனக்குச் சொல்லப்பட்டது.

ஆனால் அந்த சோகம் மரணத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் கமாருடின் கூறினார்.

நான் ஒரு மாதத்திற்கும் மேலாக தேவக்‌ஷேனை பார்க்கவில்லை.

சிறுவனின் பெற்றோர் வீட்டில் தங்குவதை நிறுத்திவிட்டு தனித்தனியாக மட்டுமே வருவார்கள் என்றும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset