நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒருங்கிணைந்த, மீள்தன்மை கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவதில் ஆசியான் கவனம் செலுத்த வேண்டும்: பிரதமர்

ஜாகர்த்தா:

ஒருங்கிணைந்த, மீள்தன்மை கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவதில் ஆசியான் கவனம் செலுத்த வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.

இன்றைய உலகளாவிய பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்வதில், மிகவும் ஒருங்கிணைந்த, மீள்தன்மை கொண்ட பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.

இதற்கு ஆசியான் தனது ஆற்றலை உள்நோக்கி செலுத்துவது கட்டாயமாகும்.

ஜாகர்த்தாவில் உள்ள ஆசியான் செயலகத்தில் ஆற்றிய தனது கொள்கை உரையில் குழுவின் தற்போதைய தலைவரான பிரதமர்,

இந்தப் பகுதி 660 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு பரந்த, துடிப்பான சந்தையைக் கொண்டுள்ளது.

இந்த ஆற்றலை மறுக்க முடியாதது. ஆனால் அதை முழுமையாக உணர, தற்போதுள்ள வளர்ச்சி இடைவெளிகளைக் குறைத்து, உறுப்பு நாடுகளுக்கு இடையே வலுவான, சமமான பொருளாதார இணைப்புகளை உருவாக்க வேண்டும்.

மேலும் கோலாலம்பூரில் நடைபெறும் 47ஆவது ஆசியான் உச்சி மாநாட்டில், ஆசியான் மீண்டும் ஒருமுறை வட்டாரத்திற்குள் பொருட்களின் தடையற்ற ஓட்டத்தை மேம்படுத்துவதற்கான அதன் கூட்டு உறுதிப்பாட்டை நிரூபிக்கும் என்று டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset