நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசிரியர் குத்தப்பட்ட வழக்கின் விசாரணைக்கு உதவ 14 வயது மாணவன் கைது: போலிஸ்

காஜாங்:

ஆசிரியர் குத்தப்பட்ட வழக்கின் விசாரணைக்கு உதவ 14 வயது மாணவனை போலிசார் கைது செய்துள்ளனர்.

காஜாங் மாவட்ட போலிஸ் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோப்  இதனை தெரிவித்தார்.

திங்கட்கிழமை பள்ளி வளாகத்தில் ஒரு மாணவர் தன்னை அடித்து மிரட்டியதாக 29 வயது ஆசிரியர் புகார் அளித்தார்.

இந்த சம்பவம் காஜாங்கில் உள்ள ஒரு இடைநிலைப்பள்ளியில் நடந்தது.

ஆசிரியரின்  புகாரின் அடிப்படையில் அம்மாணவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணைகளின்படி, உடற்கல்வி வகுப்பைத் தவறவிட்டதற்காக புகார்தாரர் கண்டித்தபோது சந்தேக நபர் இதனை செய்துள்ளார்.

சந்தேக நபர் திருப்தி அடையவில்லை. மேலும் சந்தேக நபர் புகார்தாரரை மிரட்டி முகத்தில் குத்தத் தொடங்கும் வரை புகார்தாரருடன் சண்டையிட்டார்.

இதை பல ஆசிரியர்கள் மற்றும் பிற மாணவர்கள் பார்த்தனர் என்று நாஸ்ரோன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தகவலின் பேரில், போலீசார் ஒரு மாணவரை கைது செய்தனர்.

பின்னர் இன்று வரை இரண்டு நாட்கள் காவலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset