நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்

புது டெல்லி: 

சத்தீஸ்கரில் கேரளத்தைச் சேர்ந்த 2 கத்தோலிக்க கன்னியாஸ்திரீகள் கைது செய்யப்பட்டனர். இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வலதுசாரி ஹிந்து அமைப்புகளால் துன்புறுத்தப்பட்டதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி மக்களவையில் வலியுறுத்தினார்.

தாங்கள் பின்பற்றும் மத நம்பிக்கைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது அநீதி. பாஜக ஆர்எஸ்எஸ் ஆட்சியில் சிறுபான்மையினர் திட்டமிட்டு துன்புறுத்தப்படுகின்றனர் என்று ராகுல் கூறினார்.

மூன்று சிறுமிகளை கட்டாயமாக மதமாற்றம் செய்து, கடத்திச் செல்வதாக உள்ளூர் பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், சத்தீஸ்கரின் துர்க் ரயில் நிலையத்தில் 2 கன்னியாஸ்திரிகள் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset