
செய்திகள் ASEAN Malaysia 2025
தாய்லாந்து - கம்போடியா உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்: மலேசியா வலியுறுத்து
புத்ராஜெயா:
தாய்லாந்து - கம்போடியா உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்.
வெளியுறவு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இதனை வலியுறுத்தினார்.
தாய்லாந்து, கம்போடியா அதிகபட்ச சுயக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், உடனடி நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும்.
அமைதிக்கான முயற்சிகளை சீர்குலைக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தவிர்க்க மலேசியா மீண்டும் வலியுறுத்துகிறது.
ஆசியான் 2025இன் தலைவரான மலேசியா இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் அதிகரிப்பது குறித்து தீவிர கவலை தெரிவித்தது.
இதன் விளைவாக இரு தரப்பினரிடையேயும் அதிகரித்த உயிரிழப்புகள், பொது சொத்துக்கள் அழிக்கப்பட்டதையும் மலேசியா வருத்தத்துடன் பார்க்கிறது. இது உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
எல்லைப் பகுதிகளில் மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்