நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தகவல் தொடர்பு தரவு ஒழுங்குமுறை கட்டமைப்பு குறித்து பொது ஆலோசனை பிரிவை  எம்சிஎம்சி தொடங்கியுள்ளது

சைபர்ஜெயா:

தகவல் தொடர்பு தரவு ஒழுங்குமுறை கட்டமைப்பு குறித்து  பொது ஆலோசனை பிரிவை  எம்சிஎம்சி தொடங்கியுள்ளது.

எம்சிஎம்சி  எனப்படும் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் தகவல் தொடர்பு தரவுகளுக்கான அதன் முன்மொழியப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பை அடிப்படையாக கொண்டு இதை அமைத்துள்ளது.

இந்த கட்டமைப்பு, தகவல் தொடர்பு, பல்லூடக சட்டம் 1998 இல் செய்யப்பட்ட சமீபத்திய திருத்தங்களைப் பின்பற்றுகிறது.

மேலும் இது பிரிவுகள் 252ஏ, 252பி, 268ஏ ஐ அறிமுகப்படுத்தியது.

விசாரணைகளுக்கான தகவல் தொடர்புத் தரவைத் தக்கவைத்தல், பாதுகாத்தல், வெளியிடுதல் ஆகியவற்றை நிர்வகிக்கும் புதிய விதிகளுக்கு இவை சட்ட அடிப்படையை உருவாக்குகின்றன.

இக்கட்டமைப்பின் கீழ், தொடர்புடைய சேவை வழங்குநர்கள் 12 முதல் 18 மாதங்கள் வரை தரவைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

சட்ட நடைமுறைகள் மூலம் சட்ட அமலாக்கத்தால் மட்டுமே அணுக முடியும். அணுகலுக்கு வெளிப்படுத்தல் அறிவிப்பு தேவைப்படுகிறது.

அவசியம், விகிதாசாரம், சட்டபூர்வமான கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

பொது ஆலோசனை பிரிவு கடந்த  ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 8 வரை திறந்திருக்கும்.

விசாரணைகளை ஆதரிக்க தகவல் தொடர்புத் தரவை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும்.

இது குறித்து பொதுமக்கள், தொழில்துறையினரின் கருத்துக்களை எம்சிஎம்சி வரவேற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset