நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வார் பதவி விலக வேண்டும் என்ற கோஷத்துடன் மக்கள் தலைநகரில் கூடி வருகின்றனர்

கோலாலம்பூர்:

அன்வார் பதவி விலக வேண்டும் என்ற கோஷத்துடன் மக்கள் தலைநகரில் கூடி வருகின்றனர்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு எதிரான பேரணி இன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவுள்ளது.

சோகோ, தேசிய பள்ளிவாசல், மஸ்ஜித் ஜாமெக் உட்பட பல இடங்களில் மக்கள் தற்போது ஒன்றாக கூடி வருகின்றனர்.

அனைவரும் ஒன்றாக நடந்து சென்று டத்தாரான் மெர்டேகாவில் கூடவுள்ளனர்.

இந்த அமைதியான கூட்டம் மாலை 3 மணியளவில் தொடங்கவுள்ளது.

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மது,  தேசியக் கூட்டணி தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் , பாஸ் தலைவர் ஹாடி அவாங் உட்பட 18 அரசியல், அரசு சாரா நிறுவனங்கள் தலைவர்கள் இப் பேரணியில் கலந்துகொண்டு பேச உள்ளனர் என ஏற்பட்டாளர்கள் கூறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset