நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாய்லாந்து - கம்போடியா இடையிலான மோதலை அரசு எளிதாகக் கருதவில்லை: பிரதமர் அன்வார் 

அலோர் ஸ்டார்: 

தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான மோதலை மடானி அரசாங்கம் எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நம் நாட்டின் நிலைமை நிலையானதாகவும் அமைதியாகவும் இருந்த போதிலும், அந்த நாடு அதன் அண்டை நாடுகளின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்வார் தெரிவித்தார். 

தற்போது இரு நாடுகளின் தலைவர்களைத் தாம் தொடர்பு கொண்டதாகவும் அவர்கள் தாக்குதல்களை நிறுத்த தயாராக இருப்பதைத் தாம் நம்புவதாக பிரதமர் அன்வார் கூறினார்.

ஆசியான் பிராந்தியம் புவிசார் அரசியல் ரீதியாக அனைவரும் இணைந்து ஒத்துழைப்பாக செயல்படுவதால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார் அவர்.

நேற்று பெர்லிஸ், கெடா மற்றும் பினாங்கு மாநில பிகேஆர் தலைவர்களுடன் நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறூ கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset