நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் மகாதீரின் பேரப்பிள்ளை வீட்டில் கொள்ளை: 1.8 மில்லியன் ரிங்கிட் வரை இழப்பு

டாமன்சாரா:

முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் பேரப்பிள்ளை வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் 1.8 மில்லியன் ரிங்கிட் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று இங்குள்ள புக்கிட் லெடாங்கில் உள்ள அவரது வீடு உடைக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 3 மணியளவில் வீட்டுல் பணிப் பெண்ணிடம் இருந்து பாதிக்கப்பட்டவருக்கு அழைப்பு வந்தது.

அப்போது வீட்டின் பின்புறம் உள்ள கேட் வெட்டப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவரின் அறைக்குள் திருடர்கள் நுழைந்துள்ளதாகவும்  கூறினார்.

இதனை தொடர்ந்து இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

கோலாலம்பூர் போலிஸ் தலைவர் டத்தோ முகமது உசுப் ஜானைத் தொடர்பு கொண்டபோது, இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

இந்த சம்பவத்தின் இழப்பு 1.8 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்டவரின் அறையில் நகைகள் தொலைந்து போனதும் அடங்கும்.

சந்தேக நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset