நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்து பூத்தே விவகாரம்: சட்டத்துறை முடிவில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்கிறார் பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்: 

பத்து பூத்தே விவகாரத்தில், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அது குறித்த சட்டத்துறை அலுவலகத்தின் எந்த முடிவிலும் அரசாங்கம் தலையீடு செய்யவில்லை எனப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

ராயல் விசாரணை ஆணையம் (RCI), பத்து பூத்தே விவகாரத்தில் துன் மகாதீர் மீது குற்றவியல் கூறுகள் இருப்பதாக தெரிவித்தது.

இதன் அடிப்படையில், துன் மகாதீர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமா என்பதைச் சட்டத்துறை தலைவார் தான் முடிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

மேலும், இந்த விவகாரத்தில் அரசு தலையிடாது என்றும் அன்வார் உறுதியளித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset