நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வாருக்கு எதிரான பேரணி; உடனடி கர்ம வினையாகும்: டத்தோ டி. மோகன் சாடல்

பூச்சோங்:

பிரதமர் டத்தோஸ்ரீ  அன்வாருக்கு எதிரான பேரணி என்பது உடனடி கர்ம வினையாகும்.

சுக்கிம் தலைவரும் பிரபல அரசியல் தலைவருமான டத்தோ டி. மோகன் இவ்வாறு சாடினார்.

டத்தோஸ்ரீ அன்வார் பதவி விலக வேண்டும் என இன்று தலைநகரில் மாபெரும் பேரணி நடத்தப்படுகிறது.

இப் பேரணியில் கலந்து கொள்ள மக்கள் தற்போது தலைநகரில் sogo அருகில் கூட தொடங்கிவிட்டனர்.

இப் பேரணி குறித்து பேசிய டத்தோ மோகன்,

கடந்த காலங்களில் பதவியில் இருந்த பிரதமர்கள், அரசாங்கங்களுக்கு எதிராக பல போராட்டங்கள் நடந்தன.

இப் பேரணிகளுக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையேற்றுள்ளார்.

அதே வேளையில் பல பேரணிகளில் அவர் கலந்து கொண்டு குரல் கொடுத்தார்.

ஆனால் இன்று அவருக்கு எதிரான பேரணி நடத்தப்படுகிறது.

குறிப்பாக டத்தோஸ்ரீ அன்வார் பதவி விலக வேண்டும் என்பதே இந்த பேரணியில் முதன்மை நோக்கமாகும்.

இதுபோன்ற பேரணிகள் நடக்கும் என நினைத்தேன். ஆனால் இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என நான் நம்பவில்லை.

இதுதான் உடனடி கர்ம வினையாகும் என நான் நம்புகிறேன் என்று டத்தோ டி. மோகன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset