
செய்திகள் மலேசியா
பொறியியல், அறிவியல், தொழில்நுட்ப கூட்டு ஆராய்ச்சி நிறுவனத்துடனான எச்ஆர்டி கோர்ப்பின் ஒப்பந்தம் செமிகண்டாக்டர் துறைக்கு திறமையானவர்களை உருவாக்கும்
கோலாலம்பூர்:
பொறியியல், அறிவியல், தொழில்நுட்ப கூட்டு ஆராய்ச்சி நிறுவனத்துடனான எச்ஆர்டி கோர்ப்பின் ஒப்பந்தம் செமிகண்டாக்டர் துறைக்கு திறமையானவர்களை உருவாக்கும்.
நாட்டின் உயர் மதிப்புள்ள மின்சாரம், மின்னணுவியல் துறைக்கு வலுவான, நிலையான திறமைகளக் உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் கையெழுத்திட்டன.
வளர்ந்து வரும் செமிகண்டாக்டர் எனும் குறைக்கடத்தித் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சு, மனிதவள அமைச்சு ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
மேலும் உலகளாவிய குறைக்கடத்தி மையமாக மாறுவதற்கான மலேசியாவின் லட்சியத்தை நனவாக்குவதில் ஒரு மூலோபாய திட்டமாகும் உள்ளது,
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பொறியியல், அறிவியல், தொழில்நுட்ப கூட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாஃப்ரி இப்ராஹிம், எச்ஆர்டி கோர்ப்தலைமை நிர்வாக அ திகாரி டாக்டர் சையத் அல்வி முகமது சுல்தான் ஆகியோர் கையெழுத்திட்டனர்
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம், முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் செனட்டர் தெங்கு டத்தோஸ்ரீ உத்தாமா ஸப்ருல், மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் ஆகியோர் முன்னிலையில் இது கைழுத்தானது.
இந்த வரலாற்று சாதனை நிகழ்வு ஆசியான் குறைக்கடத்தி மாநாட்டில் நிகழ்ந்தது.
செமிகண்டாக்டர் துறைக்கான பொறியியல் திறமை திட்டத்தில் 15,000 உயர் கல்விமாணவர்கள், பட்டதாரிகள், தொழிலாளர்கள், ஆராய்ச்சியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் திறமை தான் பொருளாதார மாற்றத்தின் உண்மையான இயந்திரம் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.
எச்ஆர்டி கோர்ப் மூலம் மனிதவள அமைச்சு அதன் தொழில்துறை சார்ந்த, முடிவுகள் சார்ந்த பயிற்சி மாதிரியை தீவிரப்படுத்துகிறது.
குறைக்கடத்தித் துறையில் போட்டி இனி முதலீட்டின் அளவு அல்லது கட்டமைக்கப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கையை மட்டுமே சார்ந்திருக்காது.
மாறாக நாம் வளர்க்கும் திறமையால் தீர்மானிக்கப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2025, 3:12 pm
அழைப்பு இல்லாததால் பேரணியில் கலந்து கொள்ள மாட்டேன்: பிரதமர் அன்வார்
July 26, 2025, 2:45 pm
எதிர்க்கட்சி பேரணி அமைதியாக இருக்க வேண்டும்: தக்கியூடின்
July 26, 2025, 1:06 pm
அன்வார் பதவி விலக வேண்டும் என்ற கோஷத்துடன் மக்கள் தலைநகரில் கூடி வருகின்றனர்
July 26, 2025, 1:03 pm
அன்வாருக்கு எதிரான பேரணி; உடனடி கர்ம வினையாகும்: டத்தோ டி. மோகன் சாடல்
July 26, 2025, 9:41 am
தாய்லாந்து – கம்போடியா மோதலைத் தீர்க்க மலேசியா தயார்: முஹம்மத் ஹசான்
July 26, 2025, 9:31 am
தாய்லாந்து - கம்போடியா இடையிலான மோதலை அரசு எளிதாகக் கருதவில்லை: பிரதமர் அன்வார்
July 25, 2025, 10:19 pm