நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

4,000 நிரந்தர மருத்துவர் பணியிடங்களை உடனடியாக நிரப்புமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

4,000க்கும் மேற்பட்ட நிரந்தர அரசு மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதை விரைவுபடுத்துவதற்காக அதிகாரத்துவ செயல்முறையை எளிதாக்குமாறு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் சுகாதார அமைச்சை வலியுறுத்தினார்.

தகவல் தொடர்பு அமைச்சரும் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபஹ்மி ஃபட்ஸில் இதனை தெரிவித்தார்.

பணியிடங்களை நிரப்பும் செயல்முறை மிகவும் மெதுவாக இருப்பதாக நம்புவதால், இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் டத்தோஶ்ரீ அன்வார் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

ஆரம்பத்தில், பெரும்பாலான பணியிடங்கள் நவம்பர் மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று சுகாதார அமைச்சு எதிர்பார்த்தது.

ஆனால் பிரதமர் அது மிகவும் மெதுவாக இருப்பதாக நம்பினார். எனவேசுகாதார அமைச்சு  இந்த செயல்முறையை விரைவுபடுத்துமாறு வலியுறுத்தினார்.

காலியிடங்களை நிரப்ப வேண்டிய அவசியம் இருப்பதால் இது நிகழ்கிறது. இது ஒரு சிறிய தொகை அல்ல என்று அவர் வாராந்திர செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ சூல்கிப்ளி நடைமுறைகளை பாதிக்காமல் செயல்முறையை விரைவுபடுத்தவும் எளிமைப்படுத்தவும் உறுதியளித்துள்ளதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset