நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

25 ஆண்டுகளுக்குப் பிறகு அன்வார் எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க துன் மகாதீர் தயாராகி வருகிறார்

கோலாலம்பூர்:

25 ஆண்டுகளுக்குப் பிறகு அன்வார் எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தயாராகி வருகிறார்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவி விலக வேண்டும் என நாளை தலைநகரின் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது.

அன்வார் பதவி விலக வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்த துன் மகாதீர் தயாராகி வருகிறார்.

கடந்த 1998 இல் டத்தோஶ்ரீ அன்வார் மீது சுமத்திய அதே குற்றச்சாட்டுகளை மீண்டும் கூறுகிறார்.

இதன் மூலம் 25 ஆண்டுகளுக்கு பிறகு நாட்டின் அரசியல் சூழல் முற்றிலும் மாறிவிட்டது.

இன்று மாலை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் அவர்,

நாட்டை நேசிக்கும் பல இன மலேசியர்கள் நாளை கோலாலம்பூரில் நடைபெறும் துருன் அன்வார் பேரணியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

இந்த அமைதியான கூட்டம் ஒரு ஜனநாயக செயல்முறையாகும், இது இன்று அரசாங்கத்தின் திறமையின்மையால் பாதிக்கப்பட்ட அனைத்து மலேசியர்களாலும் ஆதரிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset