நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தோனேசிய ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்; செப்டம்பர் 4இல் நடைபெறும்: சிவாஜி ராஜா 

மேடான்:

இந்தோனேசிய ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் செப்டம்பர் 4இல் நடைபெறவுள்ளது.

ஆலயத்தின் தலைவர் சிவாஜி ராஜா கேட்டு கொண்டார்.

100 ஆண்டுகளுக்கு முன் இந்தோனேசியாவில் குடி பெயர்ந்த தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஆலயம் தான் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆலயம்.

ரப்பர் தோட்டத்தில் வேலை செய்ய வந்து தமிழர்கள் இந்தோனேசிய மேடானில் இருந்து ஒரு மணி நேர தூரத்தில் இருக்கக்கூடிய பாடாங் செர்மின் லங்காட்டில் இந்த ஆலயத்தை அமைத்தனர்

அப்போது 500க்கும் மேற்பட்ட தமிழ்  குடும்பங்கள் ரப்பர் தோட்டத்தில் வேலை செய்து வந்தனர்.

அந்த காலகட்டத்தில் ராமசாமி தேவர் இங்கே ஆலயத்தை அமைத்து பொதுமக்களும் ஆலயத்தில் வழிபட்டு வந்தார்கள். 

மேலும் குடிசையாக இருந்தது இந்த ஆலயத்தை கருப்பையா மென்மேலும் விரிவடையச் செய்தார்.

அவரைத் தொடர்ந்து அவருடைய மகன் சங்கரலிங்கம் இந்த ஆலயம் பெரியதாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 

சங்கரலிங்கத்தின் மறைவுக்குப் பிறகு அவருடைய நினைவாக அவருடைய பிள்ளைகள் இந்த ஆலயத்தை  செயல்பாடுகளை சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.  

தற்போது எனது  முயற்சியில் திருப்பணி வேலைகளை செம்மையாக முடித்து செப்டம்பர் 4ஆம் தேதி  ஆலயத்தின்  கும்பாபிஷேமும் நடைபெற உள்ளது.

அதோடு நம் மலேசிய நாட்டின் பத்துமலை முருகனைப் போல 50 அடியில் உயரத்தில் முருகன் சிலையும் தங்க நேரத்தில் இங்கு காட்சியளிக்கின்றார். 

பொதுமக்கள் இதனையே அழைப்பாக ஏற்று அனைவரும் கடல் கடந்து நமது உறவுகள் கொண்டாடும் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள ஆலயத்தின் பொறுப்பாளர்கள் சார்பில் தாம் கேட்டு கொள்வதாக சிவாஜி ராஜா கூறினார்.

இந்தோனேசியா மேடானில் அமைந்துள்ள பாலாஜி வெங்கடேஸ்வரர் ஆலயத்தின் தலைவர் திருமால் இக்கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொண்டனர்.

இதனிடையே இந்த ஆலயத்தைப் பற்றிய முழு விபரங்களை கவிமாறன் காணொளியாக தயாரித்து சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset