நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வார் எதிர்ப்பு பேரணியில் கலந்து கொள்ள வாரீர்: பொதுமக்களுக்கு டான்ஶ்ரீ முஹைதீன் யாசின் அழைப்பு 

கோலாலம்பூர்: 

எதிர்வரும் ஜூலை 26ஆம் தேதி சனிக்கிழமை பிரதமர் அன்வாருக்கு எதிராக அன்வார் எதிர்ப்பு பேரணி எதிர்கட்சி சார்பில் முன்னெடுக்கப்படுகிறது. 

இந்த அன்வார் எதிர்ப்பு பேரணியில் கலந்து கொள்ள அனைத்து பொதுமக்களுக்கும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஶ்ரீ முஹைதீன் யாசின் அழைப்பு விடுத்தார். 

அதுமட்டுமல்லாமல், பேரணியில் கலந்து கொள்ளும் பொதுமக்கள், எதிர்கட்சி தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் யாவரும் சட்டத்திற்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரதமருமான முஹைதீன் யாசின் கேட்டுக்கொண்டார். 

பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் எந்தவொரு காரியத்திலும் ஈடுபட வேண்டாம் என்று PN கூட்டணி தலைவருமான அவர் சொன்னார். 

பேரணியில் கலந்து கொள்வது என்பது ஒவ்வொரு மலேசியரின் அடிப்படை உரிமையாகும். அரசியலமைப்பு சட்டத்தில் இது அனுமதிக்கப்பட்டுள்ளது 

நாளை ஜூலை 26ஆம் தேதி தலைநகரில் நடைபெறும் அன்வார் எதிர்ப்பு பேரணியில் 10 ஆயிரம் முதல் 15ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset