நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்க உதவ வேண்டும்- போலீஸ் தரப்புக்குப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆணை 

கோலாலம்பூர்: 

நாளை நடைபெறும் அன்வார் எதிர்ப்பு பேரணியில் ஏற்பாட்டாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் போலீஸ் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளதாக பிரதமரின் மூத்த பத்திரிகை செயலாளர் துங்கு நஸ்ருல் அபாய்டா கூறினார். 

ஜனநாயகத்தை நிலைநாட்டுவதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதிலும் பிரதமர் அன்வார் தலைமையிலான மடானி அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். 

அரசாங்கத்தை எதிர்த்து பேரணி நடத்துவது என்பது ஜனநாயகத்தின் ஓர் அங்கமாகும். அது முறையாகவும் நியாயமாகவும் நடைபெற நடப்பு அரசாங்கமும் அரசியலமைப்பு சட்டம் உறுதிப்படுத்தும் என்று அவர் சொன்னார். 

எதிர்கட்சிகளின் அன்வார் எதிர்ப்பு பேரணி குறித்து அன்வார் தெரிவித்துள்ளார். ஜனநாயகமும் சீர்த்திருத்தம் முன்னோடியாக கொண்டிருக்கும் அன்வார் இப்ராஹிம், இந்த பேரணிக்கு போலீஸ் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset