நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

டியோகோ ஜோட்டாவின் மனைவியின் பதிவு:  அனைவரையும் இரணமாக்கியது

போர்த்தோ:

டியோகோ ஜோட்டாவின் மனைவி ரூத் கார்டோசோ, அவர்களின் திருமண நாளின் ஒரு மாத நாள் நினைவாக மனதை நெகிழ வைக்கும் ஒரு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ஜூலை 3-ஆம் தேதி ஸ்பெயினின் வட பகுதியில் நடந்த கார விபத்தில் லிவர்பூல் நட்சத்திரமான ஜோட்டா தனது சகோதரர் ஆண்ட்ரே சில்வாவுடன் உயிரிழந்தார். 

அதற்கு முன் 11 நாட்களுக்கு முன்னரே, தனது பல நாள் காதலியும் இரு மகன்களும் (டினிஸ் – 4, டுவார்டே – 2) மற்றும் ஒரு 8 மாத குழந்தையின் தாயுமான ரூத்தை, ஜோட்டா திருமணம் செய்திருந்தார்.

தொடர்ந்து, ரூத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்கள் திருமண நாள் புகைப்படங்களை பகிர்ந்து, நெஞ்சை உருக்கும் வார்த்தைகளை எழுதியுள்ளார்:

“1 month of our ‘until death do us part’. Forever. Your white girl.”

(“மரணம்வரை இணைவோம் என்ற நம் உறவின் 1 மாதம். என்றும் உன்னுடன். உன் தேவைதை”)

இந்த பதிவை பார்த்த கால்பந்து இரசிகர்களின் இதயங்கள் இரணமாகியுள்ளன. பலர் இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றார்கள்.

லிவர்பூல் கிளப், ஜோட்டாவின் மரணத்திற்கு பின்னர் அவரது ஜெர்சி எண் 20-ஐ அனைத்துத் தரங்களிலும் ஒய்வு பெற்றதாக அறிவித்தது. இதற்கான முடிவுக்கு, அவரது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் ஆலோசித்த பிறகே வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், லிவர்பூல் இணையதளத்திலும், ஜோட்டாவுக்கான சிறப்பு அஞ்சலி பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset