நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம் பார்சிலோனா வெற்றி

டோக்கியோ:

கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் வெற்றி பெற்றனர்.

கோபே நோவிர் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் விசல் கோபே அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் விசல் கோபே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பார்சிலோனா அணியின் வெற்றி கோல்களை எரிக் கார்சியா, ரூனி பர்ட்ஜி, பெட்ரோ பெர்னாண்டஸ் ஆகியோர் அடித்தனர்.

இவ்வாட்டத்தின் போது பார்சிலோனாவின் புதிய ஆட்டக்காரர் மார்கஸ் ராஸ்போர்ட் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ஆட்டத்தில் பாயர் லெவர்குசன் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் போக்கம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset