
செய்திகள் விளையாட்டு
இந்தர்மியாமியில் இணைந்த அர்ஜெண்டினா ஆட்டக்காரர்
நியூயார்க்:
அமெரிக்காவின் இந்தர்மியாமி அணியில் அர்ஜெண்டினா வீரர் ரோட்ரிகோ டீ பால் இணைந்துள்ளார்.
அர்ஜெண்டினாவைச் சேர்ந்த ரோட்ரிகோ டீ பால் மிட்ஃபீல்டராக விளையாடி வருகிறார்.
கடைசியாக அட்லாட்டிகோ மாட்ரிட் அணியில் விளையாடிவ ந்த இவர் தற்போது இந்தர்மியாமி அணியில் இணைந்துள்ளார்.
ஏற்கெனவே,இந்த அணியில் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த மெஸ்ஸி விளையாடி வருகிறார். இவர்கள் இருவர் சிறந்த நண்பர்கள்.
களத்தில் மெஸ்ஸிக்கு எதாவது பிரச்னை என்றால் முதல் ஆளாக வருவதில் ரோட்ரிகோ டீ பால் புகழ்ப்பெற்றவர்.
கால்பந்து ரசிகர்கள் இவரை மெஸ்ஸியின் பாதுகாவலன் என்றெல்லாம் அழைப்பது குறிப்பிடத்தக்கது.
அடலாட்டிகோ மாட்ரிட் அணியில் இருந்து 6 மாதம் கடனில் இன்டர் மியாமிக்காக விளையாட வந்திருக்கிறார்.
மொத்தமாக 400க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடி 57 கோல்கள், 13,108 முறை பந்தினை வெற்றிகரமாக பாஸ் செய்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 8:35 am
ஜோய் பெலிக்ஸ் அல் நசர் அணியில் ரொனால்டோவுடன் இணைகிறார்
July 30, 2025, 8:34 am
ஓய்வு பெறுவது குறித்து பெப் குவார்டியோலா சூசகமாகத் தெரிவித்துள்ளார்
July 29, 2025, 9:37 am
ரொனால்டோவுடன் மீண்டும் இணைய ஆண்டனி தயார்
July 28, 2025, 9:18 am
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம் பார்சிலோனா வெற்றி
July 28, 2025, 9:15 am
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: அர்செனல் வெற்றி
July 27, 2025, 8:47 am
கிளப்புகளுக்கான நட்புமுறை ஆட்டம்: லிவர்பூல் தோல்வி
July 26, 2025, 1:39 pm
சீனப் பொது பூப்பந்து: அரையிறுதியில் மகளிர் இரட்டையர் தோல்வி
July 26, 2025, 9:58 am