நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஜோய் பெலிக்ஸ் அல் நசர் அணியில் ரொனால்டோவுடன் இணைகிறார்

ரியாத்:

ஜோய் பெலிக்ஸ் அல் நசர் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் இணைந்து விளையாடவுள்ளார்.

போர்த்துகல் வீரர் ஜோய் பெலிக்ஸ், கிளப் உலகக் கிண்ணத்தை வென்ற செல்சி அணிக்காக விளையாடி வந்தார்.

அவர் தற்போது சேர்ந்த அல் நசருடன் இரண்டு வருட ஒப்பந்தத்தில் இணைந்துள்ளதாக சவூதி புரோ லீக் கிளப் தெரிவித்துள்ளது.

முன்னதாக நான் ஒன்றாகக் கொண்டாடவும் வெற்றி பெறவும் இங்கு வந்துள்ளேன்  என்று 25 வயதான அவர் சமூக ஊடகங்களில் கூறினார்.

பெலிக்ஸ் 2019 ஆம் ஆண்டு 19 வயதில் பென்பிகாவிலிருந்து அட்லாட்டிகோ மாட்ரிட்டுக்கு சென்றார்.

பின்னர் 2022-2023 பருவத்தில் செல்சி அணியில் கடனாக சேர்ந்தார்.

அடுத்த சீசனில் பார்சிலோனா அணிக்கு கடனாக வழங்கப்பட்டார்.

அவர் ஆகஸ்ட் 2024 இல் செல்சி அணிக்கு நிரந்தரமாக மாறினார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு, சவூதி அரேபியாவிற்கு அவர் சமீபத்தில் மாறுவதறகு முன்பு செல்சி அவரை ஏசிமிலானுக்கு மீண்டும் கடனாக கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset