
செய்திகள் விளையாட்டு
விக்டர் கியோகரேஸ் ஒப்பந்தம் செய்ய அர்செனல் இணக்கம்
லண்டன்
மிகேல் ஆர்டெட்டா நீண்ட நாட்களாக தேடிய மத்திய திடல் தாக்குதல் ஆட்டக்காரார் இப்போது இறுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அர்செனல், ஸ்போர்டிங் லிஸ்பனின் ஸ்வீடன் தேசிய வீரர் விக்டர் கியோகரேஸை வாங்கும் £64 மில்லியன் ஒப்பந்தத்தில் உறுதியாக உள்ளது.
27 வயதான கியோகரேஸ், ஐந்து ஆண்டுகள் ஒப்பந்தத்தில் எமிரேட்ஸ் ஸ்டேடியத்தில் கையெழுத்திடவுள்ளார். £55 மில்லியன் உத்தரவாத கட்டணத்துடன், கூடுதலாக பெறப்படும் போனஸ் அடிப்படையிலான தொகைகளில் சமரசம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
கியோகரேஸுக்கு வட லண்டனில் ஆடுதல் என்பது கனவாக இருந்தது. மன்செஸ்டர் யுனைடெட், குறிப்பாக அவரின் முன்னாள் மேனேஜர் ரூபென் அமோரிம் தலைமையிலான அணியில் இருந்து அவர் மீதான ஆர்வம் இருந்தாலும், அவர் உறுதியாக அர்செனலை தேர்வு செய்துள்ளார்.
போர்ச்சுகல் பத்திரிகைகளின் தகவலின்படி, யுனைடெட் மறுபடியும் அவரது மாற்றத்திற்கு முயற்சி செய்திருந்தது. ஆனால், அமோரிம், முன்னாள் யுனைடெட் வீரர் மற்றும் கியோகரேஸின் நாட்டை சேர்ந்த விக்டர் லிண்டெலோஃபை குறைவாக மதித்து நடந்ததாலே, கியோகரேஸுக்கு அதில் விருப்பம் இல்லாமல் போனதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, இருவரின் முகவரான ஹசன் செடின்காயா, இந்த சூழ்நிலையில் அமோரிம் மீது கடுமையாக விமர்சனம் உள்ளதாகவும், இது கியோகரேஸின் முடிவை பாதித்ததாகவும் கூறப்படுகிறது.
மிக விரைவில், விக்டர் கியோகரேஸ் அர்செனல் வீரராகும் என எதிர்பார்க்கப்படுகிறது!
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 8:59 am
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: அல் நசர் அணி வெற்றி
July 31, 2025, 8:55 am
அனைத்துலக ஜே லீக் போட்டியில் லிவர்பூல் வெற்றி
July 30, 2025, 8:35 am
ஜோய் பெலிக்ஸ் அல் நசர் அணியில் ரொனால்டோவுடன் இணைகிறார்
July 30, 2025, 8:34 am
ஓய்வு பெறுவது குறித்து பெப் குவார்டியோலா சூசகமாகத் தெரிவித்துள்ளார்
July 29, 2025, 9:37 am
ரொனால்டோவுடன் மீண்டும் இணைய ஆண்டனி தயார்
July 29, 2025, 9:36 am
இந்தர்மியாமியில் இணைந்த அர்ஜெண்டினா ஆட்டக்காரர்
July 28, 2025, 9:18 am
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம் பார்சிலோனா வெற்றி
July 28, 2025, 9:15 am
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: அர்செனல் வெற்றி
July 27, 2025, 8:47 am
கிளப்புகளுக்கான நட்புமுறை ஆட்டம்: லிவர்பூல் தோல்வி
July 26, 2025, 1:39 pm