
செய்திகள் விளையாட்டு
அலெக்சாண்டர் இசாக் தனியாக பயிற்சி: லிவர்பூல் கவனம் மாறவில்லை
லண்டன்:
நியூகாஸ்டல் யுனைடெட் அணியின் அட்டகாசமான தாக்குதல் ஆட்டக்காரர் அலெக்சாண்டர் இசாக், அண்மையில் தனியாக பயிற்சி செய்துள்ளார் என்பதற்கான புகாரும், அவரது எதிர்காலம் குறித்து ஆரூடங்களும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
லிவர்பூல் அணி, இசாக்கை ஒப்பந்தம் செய்ய ஆவலுடன் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், நியூகாஸ்டல் அணியின் விலை £125 மில்லியனுக்கு மேல் என கூறப்பட்டதால், லிவர்பூல் தற்போது ஃபிராங்க்ஃபர்ட் அணியின் ஹூகோ எகிடிகே என்பவரை £80 மில்லியனுக்கு வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே "அனைத்து வாய்ப்புகளையும் ஆய்ந்து வருகிறோம். வீரரின் எதிர்காலம் விரைவில் முடிவடையலாம்," என இந்நிலையில், இசாகின் முகவர் கொன்சாலோ கைதான், சவுதி அரேபிய செய்தி நிறுவனம் அர்ரியாதியாவிடம் தெரிவித்தார்.
ஆனால், நியூகாசிலில் தொடர்வாரா அல்லது இடமாற்றமா என்பது குறித்து அவர் நேரடியாக எதையும் சொல்லவில்லை.
மேலும், டோக்ஸ்போர்ட் செய்தியின்படி, இசாக் தனது புதிய ஒப்பந்தத்திற்கு வாரத்திற்கு £300,000 சம்பளம் கோரிக்கையிட்டுள்ளார். தற்போது அவருக்கு வாரம் £120,000 சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது.
2022இல், ரியல் சொசிடாட் அணியிலிருந்து £60 மில்லியன் தொகையில் நியூகாஸ்டல் அணிக்கு வந்த இசாக், 6 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார்.
தனிப்பட்ட பயிற்சி, புதிய சம்பள விவாதம், லிவர்பூலின் உற்சாகம் ஆகியவை ஒன்று சேர்ந்து, இசாகின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 8:59 am
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: அல் நசர் அணி வெற்றி
July 31, 2025, 8:55 am
அனைத்துலக ஜே லீக் போட்டியில் லிவர்பூல் வெற்றி
July 30, 2025, 8:35 am
ஜோய் பெலிக்ஸ் அல் நசர் அணியில் ரொனால்டோவுடன் இணைகிறார்
July 30, 2025, 8:34 am
ஓய்வு பெறுவது குறித்து பெப் குவார்டியோலா சூசகமாகத் தெரிவித்துள்ளார்
July 29, 2025, 9:37 am
ரொனால்டோவுடன் மீண்டும் இணைய ஆண்டனி தயார்
July 29, 2025, 9:36 am
இந்தர்மியாமியில் இணைந்த அர்ஜெண்டினா ஆட்டக்காரர்
July 28, 2025, 9:18 am
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம் பார்சிலோனா வெற்றி
July 28, 2025, 9:15 am
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: அர்செனல் வெற்றி
July 27, 2025, 8:47 am
கிளப்புகளுக்கான நட்புமுறை ஆட்டம்: லிவர்பூல் தோல்வி
July 26, 2025, 1:39 pm