நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ரியல்மாட்ரிட்டில் மோட்ரிச் விட்டுச் சென்ற 10 ஆம் எண் ஜெர்சியை எம்பாப்பே பெற்றுள்ளார்

மாட்ரிட்:

ரியல்மாட்ரிட்டில் மோட்ரிச் விட்டுச் சென்ற 10 ஆம் எண் ஜெர்சியை எம்பாப்பே பெற்றுள்ளார்.

அடுத்த சீசனில் ரியல்மாட்ரிட்டில் கிளையன் எம்பாப்பே 10 ஆம் எண் ஜெர்சியை அணிவார்.

கிளப்பில் தனது முதல் சீசனில் அணிந்திருந்த 9 ஆம் எண்ணை மாற்றுவார் என்று ஒரு வட்டாரம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.

ரியல்மாட்ரிட்டில் 13 ஆண்டுகள் விளையாடிய பிறகு ஏசிமிலானில் இணைந்த லூகா மோட்ரிச் வெளியேறியதைத் தொடர்ந்து இந்த எண் 10 இப்போது அவருக்கு கிடைக்கிறது.

பிரான்ஸ் தேசிய அணியுடன் எம்பாப்பே 10 ஆம் எண் ஜெர்சியையும் அணிகிறார்.

மேலும் அந்த எண் கிடைக்கும்போது மாட்ரிட்டில் அதை அவர் எடுப்பார் என்று ஆரம்பத்திலிருந்தே திட்டமிடப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset