நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண செஸ் போட்டி இந்தியாவில் நடைபெறும்: சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவிப்பு

புது டெல்லி:

உலகக் கிண்ண செஸ் போட்டி அக்டோபர் 30-ஆம் தேதி தொடங்கி நவம்​பர் 27-ஆம் தேதி வரை இந்​தி​யா​வில் நடை​பெறும் என சர்​வ​தேச செஸ் கூட்​டமைப்பு, ஃபிடே அறி​வித்​துள்​ளது. 

இப்போட்டி நடைபெறும் நகரம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று ஃபிடே கூறியுள்ளது.

இந்​தத் தொடரில் 206 வீரர்​கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

முதல் 3 இடங்​களை பிடிப்​பவர்​கள் 2026-ஆம்
ஆண்டு நடை​பெறும் ஃபிடே கேண்​டிடேட்ஸ் செஸ் தொடரில் கலந்து கொள்ள தகுதி பெறு​வார்​கள்.

கேண்​டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்​பியன் பட்​டம் வெல்​லும் வீரரே, உலக செஸ் சாம்​பியன்​ஷிப்​பில் விளை​யாடத் தகுதி பெறு​வார். 

கேண்​டிடேட்ஸ் தொடரின் வெற்​றி​யாளர், தற்​போது உலக சாம்​பிய​னாக உள்ள இந்​தி​யா​வின் டி.கு​கேஷுடன் பலப்​பரீட்சை நடத்​து​வார்.

உலகக் கிண்ண செஸ் தொடரை 23 வருடங்​களுக்குப் பிறகு இந்​தியா ஏற்று நடத்தவுள்​ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset