நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

விம்பிள்டன் அரங்கம் விரிவாக்கத் திட்டம் அங்கீகாரம் பெற்றது

விம்பிள்டன் டென்னிஸ் மைதானத்தை மூன்று மடங்கு பெரிதாக்கும் திட்டத்துக்கு வழிவகுக்கும் வழக்குத் தீர்ப்பு நேற்று வெளியாகியது. இந்த திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த 'சேவ் விம்பிள்டன் பார்க்' (SWP) அமைப்பின் மனு உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.

பிரபலமான விம்பிள்டன் பார்க் கோல்ஃப் கிளப்பை மையமாகக் கொண்டு மேற்கொள்கப்படும் இந்த வளர்ச்சித் திட்டம், பிரிட்டனின் கிரேட்டர் லண்டன் ஆணையத்தால் (GLA) ஏற்கனவே ஒப்புதல் பெற்றது. இதில் 38 புதிய டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் 8,000 இருக்கை கொண்ட ஒரு புதிய ஸ்டேடியம் உள்பட பல கட்டமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன.

SWP அமைப்பு, இந்த நிலம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பதால் இந்த திட்டம் சட்டவிரோதமானது என நீதிமன்றத்தில் வாதிட்டது. அவர்கள் வாதப்படி, விம்பிள்டன் பார்க் என்பது வரலாற்று சிறப்புமிக்க இடம் (Grade II*-listed) என்பதால், கட்டுமானத்துக்கு கட்டுப்பாடுகள் உள்ளன என தெரிவித்தனர்.

ஆனால், அல் இங்கிலாந்து கிளப் தலைவர் டெபோரா ஜெவன்ஸ், இந்த தீர்ப்பில் மகிழ்ச்சி தெரிவித்தார். "இது ஒரு முக்கிய முன்னேற்றம்," எனக் கூறினார்.

முன்னதாக, SWP வழக்கறிஞர்கள், திட்டத்தை அங்கீகரித்தது "முடிவில்லாத முடிவாக" இருக்கிறது என்று கூறியிருந்தனர். ஆனால் நீதிபதி சைனி, “இது திட்டமிடல் சார்ந்த நியாயமான முடிவாகும்; தேவையான காரியங்களை கருத்தில் கொண்டு தீர்மானிக்கப்பட்டது” என கூறினார்.

இந்த திட்டத்தின் மூலம்:
7 பராமரிப்பு கட்டடங்கள்
புதிய நுழைவுப் பகுதிகள்
பொதுமக்கள் அணுகலாம் என அனுமதிக்கப்படும் பூங்கா பகுதிகள்

அனைத்தும் கட்டமைக்கப்பட உள்ளது. மேலும், இது எதிர்காலத்தில் விம்பிள்டன் தகுதிச்சுற்று போட்டிகளை இங்கு நடத்துவதை சாத்தியமாக்கும்.

இதேவேளை, SWP அமைப்பு மீண்டும் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு இருக்கின்றது என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset