நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக் தினத்தன்று ஒற்றுமையோடும் ஒத்துழைப்போடும் செயல்பட வேண்டும்:  வான் ஜுனைடி வேண்டுகோள்

 

கூச்சிங்: 
சரவாக் மாநில மக்கள் அரசு மற்றும் தனியார் துறையுடன் ஒன்றிணைந்து மாநிலத்தின் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க முயல வேண்டும் என்று சரவாக் ஆளுநர் துன் வான் ஜுனைடி துவாங்கு ஜாஃபார் கேட்டுக் கொண்டார்.

அரசு கொள்கைகள்  மூலகட்டமைப்புகளை வழங்குகிறது. முதலீட்டுக்கு தனியார் துறை தூண்டுகோலாக இருக்கிறது. மக்கள் தான் வளர்ச்சி கனவுகளை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள்," என்றார் அவர்.

கோவிட்-19 தாக்கத்திற்கு பிறகு  முதலீட்டின் அடைப்படையில் சரவாகை முன்னேற்ற பாதையில் இட்டுச் செல்லும் மாநில முதல்வர் தான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி ஒபெங் தலைமையை அவர் பாராட்டினார். முதலீடு பசுமை தொழில்நுட்பம் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இலக்கவியல் பொருளாதாரம், கல்வி மற்றும் கண்டுபிடிப்புகளில் முதலீடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

ஜூலை 22, 1963 என்ற தேதி சரவாக் மக்களின் அடையாளத்திற்கான முக்கியச் சின்னமாகும் என அவர் கூறினார். அந்த நாளில் பிரிட்டிஷ் ஆதிக்க அரசு சுயாட்சி உரிமையை சரவாக்கிற்கு அளித்து, முதல் முதல்வராக தான் ஸ்ரீ ஸ்டீபன் காலொங் பொறுப்பேற்றார்

"இது மலாயா, சபா, சிங்கப்பூர் மற்றும் சரவாக் இணைந்து மலேசியா கூட்டமைப்பை உருவாக்குவதற்கான தொடக்கமாக இருந்தது," என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset