
செய்திகள் மலேசியா
தெமர்லோ, பாலோக் பாருவில் புகைமூட்டம் தீவிரம்: காற்று தரம் மோசம்
குவாந்தான்:
மலேசியாவின் பல பகுதிகளில் புகைமூட்டம் பெருகும் நிலையில், பகாங் மாநிலத்தின் பாலோக் பாரு "ஆரோக்கியமற்ற" காற்று தரத்தை பதிவுச் செய்துள்ளது. இது மாநிலத்தின் 2ஆவது ஆரோக்கியமற்ற காற்று கொண்ட பகுதியாக இரண்டாவது இடமாக மாறியுள்ளது.
இன்று பிற்பகல் 1 மணி நேரக்கட்டத்தில், தேமர்லோவில் காற்று மாசுபாடு குறியீட்டு (API) மதிப்பு 154 ஆகவும், பாலோக் பாருவில் 133 ஆகவும் இருந்தது. நேற்று இது முறையே 100 மற்றும் 75 ஆக இருந்தது.
இதனிடையே, ரொம்பின், ஜெராந்தூட் மற்றும் இண்ட்ரா மகோத்தோ ஆகிய மையங்கள் மிதமான அளவிலான API மதிப்புகளை (59 முதல் 91 வரை) காட்டின.
பாலோக் பாருவில் உள்ள ஜாலான் கெபாங் ஜாபோர் சாலையோர மேம்பாலம் அருகே நேற்று ஏற்பட்ட தீ விபத்தின் பின்னர் புகைபடலங்கள் மேலே விரிந்து பரவியது. இதனால் அந்த பகுதியில் காற்று தரம் மேலும் மோசமாகும் அபாயம் உள்ளது.
தீயை முழுமையாக அணைக்க முடியாத நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அதிகாரிகள் தீயின் பரவலை கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே பகாங் தீயணைப்பு துறையினரிடம் பெசேரா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அண்டன்சூரா ரபுவிற்கும் தொடர்பு கொண்டு, தீ பரவல் அளவு மற்றும் அணைக்கும் நடவடிக்கைகள் குறித்து தகவல் கேட்டுள்ளதாக New Straits Times செய்தி வெளியிட்டுள்ளது.
காற்று தர அளவுகள் (API) விவரம்:
பகாங்கில் தற்போது நிலவும் புகைமூட்ட நிலை மக்கள் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால், அப்பகுதி மக்களுக்கு வெளியில் செல்வதை தவிர்க்கும் வகையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
July 21, 2025, 9:05 pm
நாட்டிற்கு தலைமையேற்கக் கூடிய ஆளுமைமிக்க தலைவர்களை உருவாக்க வேண்டும்: துன் மகாதீர்
July 21, 2025, 4:34 pm
குடிநுழைவு துறை நாட்டின் அடையாளமாகத் திகழ்கிறது: சைஃபுடின் நசுத்தியோன்
July 21, 2025, 3:58 pm
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ரஃபிசி ரம்லி கலந்து கொள்ளவில்லை
July 21, 2025, 3:46 pm