
செய்திகள் மலேசியா
சன்கோன் ஊழியர் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை
கோலாலம்பூர்:
சன்கோன் (Sunway Construction Group Bhd) நிறுவனத்தின் ஒரு ஊழியர், தனிச்சையாக மேற்கொண்ட ஒப்பந்தங்கள் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) விசாரணைக்கு உட்பட்டுள்ளார்.
மலேசிய பங்குச் சந்தையில் வெளிவந்த அறிக்கையில், சன்கோன் நிறுவனம், இந்த விசாரணை நிறுவனம் பெறும் ஒப்பந்தங்கள் அல்லது திட்டங்களுடன் தொடர்பில்லையெனவும், இது தனித்தனியான உள்கட்ட அமைப்புகளுக்குள் மட்டும் நடைபெறும் விசாரணையெனவும் விளக்கமளித்தது.
இதனிடையே இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும், சட்ட ஆலோசகர்களை நியமித்து, சம்பந்தப்பட்ட உபஒப்பந்தங்களை பரிசீலித்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விசாரணையால் சன்கோன் நிறுவனத்தின் நிதி அல்லது அன்றாட செயல்பாடுகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், தாங்கள் ஊழல் மற்றும் அநீதிமிக்க நடைமுறைகளை ஏற்கமாட்டோம் என்ற தங்களின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நிறுவனத்தின் குழும இயக்கம் முழுவதும் நேர்மை, நேர்த்தி மற்றும் கடுமையான ஒழுங்குமுறையை பேணுவதாக சன்கோன் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 21, 2025, 9:05 pm
நாட்டிற்கு தலைமையேற்கக் கூடிய ஆளுமைமிக்க தலைவர்களை உருவாக்க வேண்டும்: துன் மகாதீர்
July 21, 2025, 4:34 pm
குடிநுழைவு துறை நாட்டின் அடையாளமாகத் திகழ்கிறது: சைஃபுடின் நசுத்தியோன்
July 21, 2025, 3:58 pm
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ரஃபிசி ரம்லி கலந்து கொள்ளவில்லை
July 21, 2025, 3:21 pm