நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாடத்திட்டத்தில் நிதிசார்ந்த கல்வியை இணைக்க வேண்டும்: பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் யோ பீ யின்

 

கோலாலம்பூர்: 
பள்ளி பாடத்திட்டத்தில் நிதிசார்ந்த கல்வி (financial literacy) ஒன்றை இணைக்க வேண்டும் என பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் யோ பீ யின் (Yeo Bee Yin) வலியுறுத்தினார்.

நிதி மேலாண்மை, கடன், முதலீடு குறித்து பள்ளி மாணவர்களுக்கு ஆரம்பத்திலேயே அறிவுரை வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

"நிதிசார்ந்த கல்வி என்பது வாழ்வதற்குத் தேவையான ஒரு முக்கிய திறனாக இருக்கிறது. எனவே, நிதி அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு இணைந்து இதனை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என பரிந்துரை செய்கிறேன்," என்றார்.

2025 நுகர்வோர் கடன் மசோதா மீதான விவாதத்தின் போது அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், நிதி விழிப்புணர்வை மேம்படுத்த தேசிய அளவிலான பொதுமக்கள் விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட வேண்டும் என யோ கேட்டுக்கொண்டார்.

"நமது மக்களின் நிதி நலன்கள் மேம்படவேண்டும் என்றால், அரசாங்கம் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். வருமானம் எப்படி செலவிடப்பட வேண்டும், எவ்வளவு சேமிக்க வேண்டும், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வும் மக்களிடம் வேண்டும்," என்றார்.

இதற்கான முயற்சியில் தேசிய வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் முன்னோடி பங்கு வகிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்குமுன், துணை நிதியமைச்சர் லிம் ஹூய் யிங், 2025 நுகர்வோர் கடன் மசோதாவை இரண்டாம் வாசிப்புக்காக முன்வைத்தார்.

இந்த மசோதா, "Buy Now Pay Later" ( இப்போது வாங்கி கொள்ளுங்கள் பிறகு பணம் செலுத்துங்கள்) உள்ளிட்ட கடன் அமைப்புகளை ஒழுங்குப்படுத்தி, நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்துவதே குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset