நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ரஃபிசி ரம்லி கலந்து கொள்ளவில்லை 

கோலாலம்பூர்:

இன்று தொடங்கிய நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வின் இரண்டாவது கூட்டத்தின் முதல் அமர்வில் முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரஃபிசி ரம்லி கலந்து கொள்ளவில்லை.

பாண்டன் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.

கடந்த மாதம் பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, அவரின் இருக்கை கீழ்சபையில் அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் டி வரிசைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இப்போது மூன்றாவது வரிசையில், பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் சா கோன் இயோவுக்கு அடுத்ததாக அவரின் இருக்கை உள்ளது.

பிகேஆர் கட்சி தேர்தலில் தோல்வியைச் சந்தித்த ரஃபிசி தாம் பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக கடந்த ஜூன் 17-ஆம் தேதி அறிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset