நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடிநுழைவு துறை நாட்டின் அடையாளமாகத் திகழ்கிறது:  சைஃபுடின் நசுத்தியோன்

புத்ரா ஜெயா:

உலகளாவிய அளவில் நாட்டின் நற்பெயரை நிலைநாட்டுவதில் குடிநுழைவு துறை முக்கியப் பங்காற்றுவதாக உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

வெளிநாட்டிலிருந்து வரும் முதலீட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்குக் குடிநுழைவு துறை நாட்டின் அடையாளமாகச் செயல்படுவதாக இன்று நடைபெற்ற குடிநுழைவு துறையின் 103-ஆவது நிறைவு விழாவில் சைஃபுடின் கூறினார்.

சுற்றுலா முதல் வெளிநாட்டு முதலீடுகள் வரை ஒவ்வொரு பொருளாதார கூறுகளும் குடிநுழைவு துறை சேவைகளுடன் எவ்வாறு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தற்போது 2025-ஆம் ஆண்டுக்கான உலகளவில் சக்தி வாய்ந்த கடப்பிதழ்கள் பட்டியலில் மலேசிய கடப்பிதழ் 8-ஆவது இடத்தைப் பிடித்துள்ள தகவலையும் சைஃபுடின் இந்நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.

இதன் மூலம் மலேசியர்கள் 170 நாடுகளுக்கு விசா இல்லாத அல்லது விசா-ஆன்-அரைவல் நுழைவைப் பயன்படுத்தலாம் என்றும் அவர் விளக்கினார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset