நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டிற்கு தலைமையேற்கக் கூடிய ஆளுமைமிக்க தலைவர்களை உருவாக்க வேண்டும்: துன் மகாதீர்

புத்ராஜெயா:

நாட்டிற்கு தலைமையேற்கக் கூடிய ஆளுமை கொண்ட அதிகமான தலைவர்களை நாம் உருவாக்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முஹம்மது இதனை கூறினார்.

நாட்டில் பல்வேறான அரசியல் நெருக்கடிகள் நிலவி வருகிறது.

சரியான குறிப்பாக ஆற்றல்மிக்க தலைமைத்துவம் இல்லாததே இதற்கு எல்லாம் முக்கிய காரணமாக உள்ளது.

ஆக தற்போதைய தலைமைத்துவத்திற்கு மாற்றத்தை ஏற்படுத்துவதைவிட ஆளுமை கொண்ட தலைவர்களை நாம் உருவாக்க வேண்டும்.

ஒரு தலைவரை மட்டும் நம்பி இருக்காமல் 10 ஆளுமை கொண்ட தலைவர்களை நாம் உருவாக்க வேண்டும்.

குறிப்பாக இன்று அரசியலுக்குள் அதிகமான இளைஞர்கள் இருக்க வேண்டும்.

அரசியல் ஒரு சாக்கடை என்ற சிந்தனையில் இருந்து இளைஞர்களை விடுபட வேண்டும். நல்ல ஆளுமை கொண்ட எல்லாருமே விலகிச் சென்றால் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் வழி நடத்துவது யார்? பின்பு ஊழல் அரசியல்வாதிகள் பெருகிவிட்டார்கள் என்று புலம்புவது தான் மிச்சம் ஆகும்.

எதிர்கால அரசியலுக்கு புதிய சிந்தனையாளர்கள் நல்ல ஆற்றல் மிக்க தலைவர்கள் தேவை. அத்தகைய இளைஞர்கள் முன்வர வேண்டும். நாட்டிற்கு தோள் கொடுக்க வேண்டும்.

அதே வேளையில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் உண்மையிலேயே தகுதியானவர்களா என்பதை நாம் ஆராய வேண்டும்.

அமைச்சரவையில் இடம் பெறுபவர்கள் உண்மையிலேயே தங்களின் பணிகளை செய்வார்களா என்பதை  உறுதி செய்ய வேண்டும்.

நான் பிரதமராக இருந்தபோது எனக்கு வழங்கப்பட்ட ஊதியம் என் சேமிப்புக் கணக்கில் சேர்ந்தது. ஆனால், எனக்கு அரசு வீடு கொடுத்தது, வாகனம் கொடுத்தது, என் வீட்டு மின்சார கட்டணம் அரசு கட்டியது. எனக்கு எந்த செலவும் இல்லை. அரசு வழங்கும் அனைத்து வசதிகளையும் நான் அனுபவித்துக் கொண்டிருக்கும்போது சம்பளம் எனக்குத் தேவையா என்று கேள்வி எழுகிறது.

இளைஞர்கள் துணிவுடன் அரசியலுக்கு வர வேண்டும். நல்ல சிந்தனை வளமிக்கவர்கள் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும். இதுபோன்ற துணிவுமிக்க நடவடிக்கைகளே மலேசியாவின் எதிர்கால வெற்றிக்கு வித்திடும் என்று துன் மகாதீர் கூறினார்.

- பார்த்திபன் &;ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset