நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்கம், தனியார் வர்த்தக துறையினருடான உறவு எப்போதுமே வலுவாக இருக்க வேண்டும்; மலேசிய வர்த்தகர்கள் ஏழை, நடுத்தர நாடுகளை நோக்கி வர்த்தகம் செய்ய நகருங்கள்: துன் மகாதீர்

புத்ராஜெயா:

அரசாங்கம், தனியார் வர்த்தக துறையினருடான உறவு எப்போதுமே வலுவாக இருக்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மது இதனை வலியுறுத்தினார்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு தனியார் தொழில் துறையினர் பங்களிப்பு அளப்பரியதாக உள்ளது.

இதன் அடிப்படையில் முந்தைய அரசாங்கங்கள் தனியார் துறையினருக்கு முக்கியத்துவம் கொடுத்தது.

உதாரணத்திற்கு நெடுஞ்சாலைகள் நிர்மாணிப்பது என்பது அரசாங்கத்திற்கு மிகப் பெரிய சுமையாக இருந்தது.

இதன் அடிப்படையில் தான் அத் திட்டங்கள் தனியார் துறைக்கு வழங்கப்பட்டன.

சாலைகள் நிர்மாணிக்கப்பட்டு கட்டணமும் வசூல் செய்யப்பட்டன. இதன் மூலம் அரசுக்கு வருமானமும் கிடைத்தது.

இது தான் அரசாங்கத்திற்கும் தனியார் துறையினருக்கும் இடையிலான ஒத்துழைப்பாகும். 

இதுபோன்ற ஒத்துழைப்புகள் வரும் காலங்களிலும் தொடர வேண்டும்.

மலேசியா, ஜப்பான் பொருளாதார சங்கம், மலேசிய தெற்கு அமைப்பினருடனான சந்திப்பின் போது துன் டாக்டர் மகாதீர் இதனை கூறினார்.

மலேசிய வர்த்தகர்கள் தங்களின் தயாரிப்புகளை உள்ளூரைத் தாண்டி அனைத்துலக சந்தைக்கு ஏற்றவாறு தயாரிக்க வேண்டும். அத்தகைய சந்தைகளைத் தேட வேண்டும். பரந்த உலகில் நமக்கான சந்தை வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

அதே வேளையில் பணக்கார நாடுகளை தவிர்த்து ஏழை நாடுகளில் முதலீடு செய்வதில் வர்த்தகர்கள் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக ஆப்ரிக்க நாடுகளை நோக்கி உங்கள் கவனத்தைத் திருப்பங்கள்.

அங்குள்ள வளங்களை நோக்கி மேற்கத்திய நாடுகள் இப்போது படையெடுக்க ஆரம்பித்துள்ளன. நாம் பின் தங்கிவிடக்கூடாது. மலேசிய நிறுவனங்கள் அங்குள்ள வர்த்தக வாய்ப்புகளை நழுவ விடக்கூடாது.

இது உங்களுக்கு வெற்றியைத் தரும் என்று துன் மகாதீர் அறிவுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset