நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்க வரும் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் கல்வியமைச்சின் வழிக்காட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்: ஃபட்லினா சிடேக் 

கோலாலம்பூர்:

அரசாங்கத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள், அரசு உதவு பெறும் பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்க செல்லும் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் கல்வியமைச்சு நிர்ணயத்துள்ள இரு வழிக்காட்டுதல்களைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அதன் அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் சிறப்பு சுற்றறிக்கை, பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் அழைப்புகள் அல்லது வருகைகளுக்கான வழிகாட்டுதல்கள் ஆகிய இரு வழிகாட்டுதல்களைப் பின் பற்றுவது அவசியம் என்றார் ஃபட்லினா.

இந்நடவடிக்கை பள்ளிகளில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் முறையாக நடப்பதை உறுதி செய்வதோடு, மாணவர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதாக என்று ஃபட்லினா இன்று நாடாளுமன்றத்தில் நடந்த கேள்வி பதில் அமர்வின் போது கூறினார்.

பள்ளிகளுக்கு நிதியுதவி அளிக்க விரும்பும் ஒரு அமைப்பு அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கான நடைமுறைகள் பற்றி அறிய விரும்பிய டத்தோஸ்ரீ இக்மல் ஹிஷாம் அப்துல் அஜீஸின் துணை கேள்விக்கு ஃபட்லினா இவ்வாறு கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset