
செய்திகள் மலேசியா
மலேசியா, ஜப்பான் இடையிலான வர்த்தக உறவுக்கு வித்திட்டுவர் துன் மகாதீர்: டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் புகழாரம்
புத்ரா ஜெயா:
மலேசியா, ஜப்பான் இடையிலான வர்த்தக உறவுக்கு வித்திட்டுவர் முன்னாள் பிரதமர் துன் மகாதீர்.
மலேசியா, ஜப்பான் பொருளாதார அமைப்பின் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் இதனை கூறினார்.
மலேசியா, ஜப்பான் பொருளாதார அமைப்பின் நிர்வாகத்தினரும் மலேசிய தெற்கு அமைப்பின் நிர்வாகத்தினரும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரை சந்தித்தனர்.
மரியாதை நிமித்தத்தின் அடிப்படையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது பேசிய டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால்,
கிழக்கை நோக்கிய வர்த்தக பயணத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தவர் துன் மகாதீர்தான்.
இதன் மூலம் அதிகமான ஜப்பான் நிறுவனங்கள் மலேசியாவில் முதலீடு செய்தன.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான மலேசியர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தது.
இதே போன்று மலேசிய நிறுவனங்களும் ஜப்பானில் முதலீடு செய்துள்ளன. இரு நாட்டு பொருளாதாரமும் மேம்பாடடைய துன் மகாதீர் பல முயற்சிகளை மேற்கொண்டார்.
மேலும் துன் மகாதீர் இன்று வரை அடிக்கடி ஜப்பானுக்கு சென்று வருகிறார். இது வர்த்தக உறவுக்கு பெரும் பயனாக உள்ளது
இப்படி இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவு தொடர்ந்து வலுவாக இருப்பதற்கு துன் மகாதீர் தான் முக்கிய காரணம்.
அவரின் ஆற்றலும் அனுபவமும்
மலேசியா, ஜப்பான் பொருளாதார சங்கத்திற்கு தேவை என்று டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 21, 2025, 9:05 pm
நாட்டிற்கு தலைமையேற்கக் கூடிய ஆளுமைமிக்க தலைவர்களை உருவாக்க வேண்டும்: துன் மகாதீர்
July 21, 2025, 4:34 pm
குடிநுழைவு துறை நாட்டின் அடையாளமாகத் திகழ்கிறது: சைஃபுடின் நசுத்தியோன்
July 21, 2025, 3:58 pm
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ரஃபிசி ரம்லி கலந்து கொள்ளவில்லை
July 21, 2025, 3:46 pm
சன்கோன் ஊழியர் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை
July 21, 2025, 3:21 pm