
செய்திகள் மலேசியா
காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவைப் பதிவு செய்தால் வெளிப்புற நடவடிக்கைகளை நிறுத்த சிலாங்கூரிலுள்ள பள்ளிகளுக்கு உத்தரவு
ஷா ஆலம்:
காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவைப் பதிவு செய்தால் வெளிப்புற நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், மாணவர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு ஏதுவாக பள்ளிகள் ஏற்கனவே அமலில் உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று மாநிலக் கல்வி இயக்குநர் ஜாஃப்ரி அபு கூறினார்.
மாவட்ட கல்வி அலுவலகங்கள் உட்பட அனைத்துப் பள்ளிகளுக்கும் தங்கள் பகுதியில் காற்று மாசு குறியீடு ஆரோக்கியமற்ற அல்லது ஆபத்தான அளவை எட்டினால் எடுக்க வேண்டிய தேவையான நடவடிக்கைகளைக் கோடிட்டுக் காட்டும் ஒரு சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டக் கல்வி அலுவலகங்களும் பள்ளிகளும் அந்தச் சுற்றறிக்கையைக் கவனமாக மதிப்பாய்வு செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் காற்றின் மாசுபாடு குறியீடு 101 என்ற ஆரோக்கியமற்ற அளவை எட்டினால் வெளிப்புற நடவடிக்கைகளை நடத்துவதைத் தவிர்க்கவும் என்று அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 21, 2025, 9:05 pm
நாட்டிற்கு தலைமையேற்கக் கூடிய ஆளுமைமிக்க தலைவர்களை உருவாக்க வேண்டும்: துன் மகாதீர்
July 21, 2025, 4:34 pm
குடிநுழைவு துறை நாட்டின் அடையாளமாகத் திகழ்கிறது: சைஃபுடின் நசுத்தியோன்
July 21, 2025, 3:58 pm
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ரஃபிசி ரம்லி கலந்து கொள்ளவில்லை
July 21, 2025, 3:46 pm
சன்கோன் ஊழியர் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை
July 21, 2025, 3:21 pm