
செய்திகள் மலேசியா
முன்னாள் காதலியை கத்தியால் குத்திய வழக்கு: வெளிநாட்டு மாணவர் மீது குற்றச்சாட்டு
ஷா ஆலம்:
தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர் ஒருவர், தனது முன்னாள் காதலியை கழுத்தில் கத்தியால் குத்தி காயம் விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், இன்று செக்ஷன் நீதிமன்றத்தில் குற்றம் சட்டப்பட்டார்.
22 வயதான யூ வெய், குற்றச்சாட்டை நிராகரித்து நீதிபதி நோரஸ்லின் ஓத்மான் முன் "தாம் குற்றமற்றவர்" என தெரிவித்தார்.
அவர்மீது 2024 ஜூலை 14ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் பண்டார் சன்வேயில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 20 வயதான வூ ஜாலின் மீது, உயிருக்கு ஆபத்தான வகையில் கழுத்தில் கத்தியால் குத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி ஆகிய தண்டனைகளை உள்ளடக்கிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 326-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனநல பாதிக்கப்பட்டவர்: வழக்கறிஞர் விளக்கம்
இதனிடயே இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வெளிநாட்டு மாணவர் மனநலக் கோளாறுடன் இருப்பதாக அவரது வழக்கறிஞர் ரெவின் குமார் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது ஆண்டு மாணவரான இவர், இன்னும் ஒரு வருடத்தில் தனது கல்வியை முடிக்கவுள்ளதாகவும், இரட்டை மன அழுத்தக் கோளாறு (bipolar disorder) காரணமாக தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
July 21, 2025, 9:05 pm
நாட்டிற்கு தலைமையேற்கக் கூடிய ஆளுமைமிக்க தலைவர்களை உருவாக்க வேண்டும்: துன் மகாதீர்
July 21, 2025, 4:34 pm
குடிநுழைவு துறை நாட்டின் அடையாளமாகத் திகழ்கிறது: சைஃபுடின் நசுத்தியோன்
July 21, 2025, 3:58 pm
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ரஃபிசி ரம்லி கலந்து கொள்ளவில்லை
July 21, 2025, 3:46 pm
சன்கோன் ஊழியர் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை
July 21, 2025, 3:21 pm