
செய்திகள் மலேசியா
ஜெய்ன் ராயன் வழக்கில் தற்காப்பு வாதம் புரிய தாயாருக்கு உத்தரவு: தந்தை விடுவிக்கப்பட்டார்
பெட்டாலிங்ஜெயா:
ஜெய்ன் ராயன் வழக்கில் தற்காப்பு வாதம் புரிய தாயாருக்கு பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தனது குழந்தையை உடல் ரீதியாக காயப்படுத்தும் அளவுக்கு புறக்கணித்த குற்றச்சாட்டில் ஜெய்ன் ராயன் தாயார் இஸ்மானிராவுக்கு நீதிபதி டாக்டர் சியாலிசா இந்த உத்தரவை பிறப்பித்தர்.
தீர்ப்பை வாசித்த நீதிபதி, தாயார் மீதான குற்றத்தை முதன்மை பார்வையில் அரசு தரப்பு வெற்றிகரமாக நிரூபித்ததை அடுத்து இந்த விஷயத்தில் தீர்ப்பளித்தார்.
மேலும் குழந்தையின் தந்தை ஜெய்ம் இக்வான் ஜஹாரிக்கு எதிரான வழக்கைத் தொடர போதுமான ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.
கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி தொடங்கிய 20 நாள் விசாரணையில் 28 அரசு தரப்பு சாட்சிகளை அழைத்த பிறகு ஏப்ரல் 24 ஆம் தேதி வழக்கு விசாரணையை அரசு தரப்பு முடித்து வைத்தது.
சாட்சியம் அளித்த அரசு தரப்பு சாட்சிகளில் ஜெய்ன் ரய்யானின் உடலை முதலில் கண்டுபிடித்த ஃபைசுல் நஜிப் அப்துல் முனைம், பாதிக்கப்பட்டவரின் பராமரிப்பாளர் அவுனி அஃபிகா அபாஸ், தடயவியல் ஆலோசகர் மருத்துவர் ரோஹாயு ஷஹர் அட்னான், மூன்று விசாரணை அதிகாரிகள், இரண்டு குழந்தை சாட்சிகள் ஆகியோர் அடங்குவர்.
முன்னதாக 6 வயதான ஜெய்ன் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காணாமல் போனதாகக் கூறப்பட்டது.
மறுநாள் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள ஆற்றில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 21, 2025, 9:05 pm
நாட்டிற்கு தலைமையேற்கக் கூடிய ஆளுமைமிக்க தலைவர்களை உருவாக்க வேண்டும்: துன் மகாதீர்
July 21, 2025, 4:34 pm
குடிநுழைவு துறை நாட்டின் அடையாளமாகத் திகழ்கிறது: சைஃபுடின் நசுத்தியோன்
July 21, 2025, 3:58 pm
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ரஃபிசி ரம்லி கலந்து கொள்ளவில்லை
July 21, 2025, 3:46 pm
சன்கோன் ஊழியர் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை
July 21, 2025, 3:21 pm