நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரிகைக்கு கூடுதல் ஒதுக்கீடுகள் இல்லை: நயிம் மொக்தார் 

புத்ராஜெயா:

1446எச்/2025 ஹஜ் பருவத்தில் மலேசியா உட்பட எந்த நாட்டிற்கும் சவூதி அரேபியாவால் கூடுதல் ஹஜ் யாத்திரை ஒதுக்கீடுகள் வழங்கப்படவில்லை.

பிரதமர் துறையின் மத விவகாரங்கள் அமைச்சர் டத்தோ டாக்டர் முகமது நயிம் மொக்தார் இதனை கூறினார்.

கூடுதல் ஒதுக்கீடு 1445எச்-இல் ஹஜ் நிதி வாரியத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டது. அது ஹஜ் யாத்ரீகர்கள் உட்பட முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது.

கடந்த 2020 முதல்  இந்த ஆண்டு வரை பயன்படுத்தப்படாத அதிகாரப்பூர்வ மலேசிய ஹஜ் ஒதுக்கீடு எதுவும் இல்லை.

சவூதி அரேபிய அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் அதிகாரப்பூர்வ வருடாந்திர ஹஜ் யாத்திரை ஒதுக்கீடு 31,600 ஆகும்.

இது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் முடிவின் அடிப்படையில் வழங்கப்பட்டது.

இது ஒரு நாட்டின் மொத்த முஸ்லிம் மக்கள்தொகையில் 0.1 சதவீதத்தை நிர்ணயிக்கிறது, என்று அவர் இன்று மக்களவையில் நடந்த கேள்வி பதில் அமர்வின் போது அவர் இதனை கூறினார்.

அரசாங்கம் சட்டப்பூர்வ பயண முகவர்களுக்கு கூடுதல் ஹஜ் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்த பெங்கலான் சபா நாடாளுமன்ற உறுப்பினர்  டத்தோ டாக்டர் அஹ்மத் மர்சுக் ஷாரியின் துணை கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset